காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீபாலசுப்பிரமனியர் ஆலய தீர்த்த குளம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் பயன்படுத்த முடியாத நிலையில் காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ஸ்ரீபாலசுப்பிரமனியர் திருக்கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்திற்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். அவ்வாறு சுவாமியை தரிசிக்கும் பக்தர்கள் இங்குள்ள தீர்த்த குளத்தில் நீராடி செல்வது வழக்கம்.
மேலும் இந்த குளத்தை அப்பகுதியினர் தங்களுடைய நீராதாரமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோயில் வளாகத்தில் வார சந்தை நடைபெறுவது வழக்கம். இதற்கென வியாபாரிகளிடம் பேரூராட்சி நிர்வாகமும் கணிசமான தொகை வசூலித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சந்தைகளில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளில் சிலர் அழுகிப் போன காய்கறிகளை குளத்தில் வீசி செல்கின்றனர். இதனால் குளத்தின் தண்ணீரின் நிறம் மாறி தூர்நாற்றம் வீசுவதுடன் ஆகாயத்தாமரை படர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனை காணும் பக்தர்கள் முகம் சுளித்தப்படி செல்கின்றனர். எனவே குளத்தை தூர்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பக்தர்கள் கோயில் நிர்வாகத்திற்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேந்தன்