அதர்வா-மணிகண்டன் நடித்த “மத்தகம்” வெப் தொடர் வெளியானது!

நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் நடித்த “மத்தகம்” வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில்…

நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் நடித்த “மத்தகம்” வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மத்தகம்’. இந்த வெப்தொடரில் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘மத்தகம்’ வெப் தொடரின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்தது. இந்த வெப்தொடரை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. மேலும் தர்புகா சிவா இந்த தொடருக்கு இசையமைத்துள்ளார். இந்த வெப் தொடர், தமிழ் உள்பட 7 மொழிகளில் வெளியாகிறது. ஸ்கிரீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இந்நிலையில் மத்தகம் வெப் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்த தொடரின் முதல் பாகத்தில் 5 அத்தியாயங்கள் உள்ளன. இந்த தொடர் வெளியாகி 8 மணிநேரத்திற்குள் ரசிகர்கள் 5 அத்தியாயங்களையும் பார்த்து விட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.