டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், தமிழக பள்ளி மாணவ, மாணவியர் தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
டெல்லியில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் கடந்த 11ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, காஷ்மீர், கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 3,000-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 9 முதல் 21 வயதுடைய தனித்தனி பிரிவினருக்கு நடைபெற்ற இப்போட்டியில் தமிழகத்தின் சார்பில் ஷேடோ காய் கராத்தே பள்ளி மூலமாக வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட 8 பேரில் 11 முதல் 13 வயதுடைய பிரிவில் 4 பேர் கலந்துகொண்ட நிலையில் ஸ்ரீநிகா என்ற மாணவி தங்கப்பதக்கமும் , எஞ்சிய மூவர் இரு வெள்ளி மற்றும் ஒருவர் வெண்கலம் பதக்கம் வென்றனர். மேலும் 9-10 வயது பிரிவில் இரு வெள்ளி இரு வெண்கலம் என நால்வரும் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பதக்கங்களை வென்று ஊர் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு ராஜவா அகாடமி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, மேலும் கராத்தே பயிற்றுநர் ராஜேஷ் தன்னம்பிக்கை வார்த்தைகளை கூறி பெருமைப்படுத்தினர்.
பின்னர் தாங்கள் வென்ற பதக்கங்கள் மற்றும் சான்றுகளுடன் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். தங்கபதக்கம் வென்ற ஸ்ரீநிகா கூறுகையில் , இது போன்ற பல்வேறு போட்டிகளில் பல பதக்கங்களை வென்று தமிழகத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்ப்பேன் எனவும் கூறினார்.
ரூபி.காமராஜ்







