காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புலிவனத்தில் நடைபெற்ற மதிமுக உள்கட்சி அமைப்பு தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு
சால்வை அணிவித்து மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா வாழ்த்து தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அக்கட்சிக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து மாவட்டம் வாரியாக புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புலிவனம் ஆஞ்சநேயர் திருமண மண்டபத்தில் மதிமுக ஐந்தாவது உள்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றது.
இதனை மாவட்ட செயலாளர் கருணாகரன், மாவட்ட அவைத்தலைவர் வளையாபதி உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர். சிறப்பு அழைப்பாளர்களாக மதிமுக துணைப்பொது செயலாளர் மல்லை சத்யா, கொள்கை விளக்க செயலாளர் வந்தியத்தேவன் ஆகியோர் கலந்துக் கொண்டு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாவட்டம்,ஒன்றியம்,பேரூர்,கிளைகள் என அனைத்து மட்டத்திற்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பணிசிறக்க மல்லை சத்யா வாழ்த்தினார்.இதில் திரளான மதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
-வேந்தன்