காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வீசிய பலத்த காற்றினால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் அடுத்தடுத்து பக்கவாட்டில் கவிழ்ந்தன. நல்வாய்ப்பாக அந்நேரம் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களை அவ்வப்போது ஓட்டுநர்கள் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலையில் இப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் எதிர்பாரதவிதமாக சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கண்டெய்னர் லாரிகள் திடீரென அடுத்தடுத்து கவிழ்ந்தன.இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பானது. நல்வாய்ப்பாக அச்சமயம் லாரியில் டிரைவர்கள் மற்றும் பொருட்கள் ஏதும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
-வேந்தன்