காமராஜர் நினைவு நாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம் பெருந்தலைவர் காமராஜர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழகத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து ,
இந்திய நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்த மாமனிதர்,

எண்ணற்ற திட்டங்கள் மூலம்
ஏழைகளின் வாழ்விற்கு ஏற்றம் தந்து ,
வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற
எளிமையின் அடையாளம்;

தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம்
“பெருந்தலைவர்” காமராஜர் அவர்களின் நினைவு நாளான இன்று,

இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் கர்மவீரர் அவர்கள் ஆற்றிய பெரும் சேவைகளை போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.