தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்குத் திரும்பவேண்டுமென நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது. இதனால், ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார். உடனே ட்விட்டர் பதிவிலும் அந்த தகவலை வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் லேசான காய்ச்சல் தான் உள்ளது. இதனால் வீட்டிலேயே மருந்து, மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். இதனால் அவர் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீட்டில் அவர் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி: ‘ஓசூர்; ‘வேண்டாம் போதை’ 1200 மாணவர்கள் உறுதிமொழியேற்பு’
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குணமடையத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/ikamalhaasan/status/1547267825827385344
அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்குத் திரும்பவேண்டுமென விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.








