அதிமுகவின் புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் மற்றும் கட்சியின் அமைப்புச் செயலாளர்களை நியமித்து அவர்களின் புதிய பொறுப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அ.தி.மு.க.வில் இன்று (13.07.2022) நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நியமனம் செல்லாது. இன்று வரை தாம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். தனது ஒப்புதல் இல்லாமல் அதிமுகவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.
அண்மைச் செய்தி: ‘தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் குணமடைய கமல்ஹாசன் வாழ்த்து’
மேலும், எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பை ஏற்கக் கூடாது எனவும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.








