தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைப்போமா என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படுமென மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையாவை, அவரது இல்லத்துக்குச் சென்று, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். இதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், 3-வது கட்ட தேர்தல் பரப்புரைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறிய கமல்ஹாசன், தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.







