மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்!

மேற்கு வங்க மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக…

மேற்கு வங்க மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தார். மேற்கு வங்க சட்டப்பேரவையின் முதற்கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6ம் தேதியும் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 10ம் தேதியும், 5ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 17ம் தேதியும், 6ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 22ம் தேதியும், நடைபெறும் எனவும் சுனில் அரோரா அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக 7ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.