கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்தின் மூலம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ” அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்களைத் தொடர்ந்து, கவுதம் மேனன் மற்றும் சிம்பு மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தின் மூலம் குஜராத்தி நடிகையான ‘சித்தி இடனானி’ தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். மேலும் சிம்புவுக்கு அம்மாவாக ‘ராதிகா நடித்துள்ளார்.
இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ” அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து, இப்படத்திலும் இசைப்புயல்“ஏ. ஆர். ரகுமானே இசையமைக்கிறார்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான இரு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் டீசர் திரை ரசிகர்களிடம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின் அறிவிப்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், படக்குழு இசைவெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது. இவ்விழாவைச் செப்டம்பர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் கலந்து கொள்வார்கள் எனக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







