தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசனத்திற்காக கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில குறுவை சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
முன்னதாக கல்லணை பராமரிப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 11-ம் தேதி ஆய்வு செய்தார். பின்னர் கல்லணையில் இருந்து இன்று (16-ம் தேதி) தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காக இன்று தஞ்சை மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில்வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர். கல்லணை இன்று திறக்கப்பட்ட நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.







