கள்ளக்குறிச்சி வன்முறை வழக்கு; 77 பேருக்கு ஜாமீன்

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 77 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி…

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 77 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிக தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.

இதில் போராட்டக்காரர்கள் பள்ளியின் பேருந்தை டிராக்டரால், சேதப்படுத்தினர். பள்ளியில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். இதுமட்டும் இல்லாமல் இந்த வன்முறையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பள்ளி வாகனங்கள், மேஜைகள், கண்ணாடிகள் என கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் போராட்டக்காராக்கள் அடித்து நொறுக்கி, எரித்து சாம்பலாக்கினர். இதையடுத்து சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கணியாமூர் கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 236 பேர் ஜாமின் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரனை நேற்றைய தினம் முதல் விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி பூர்ணிமா விசாரனை செய்து வந்த ஜாமின் கோரியவர்களில் முதற்கட்டமாக கல்லூரி மாணவர்கள் 77 பேருக்கு ஜாமின் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்னிமா உத்தரவிட்டது. நாளை மீண்டும் 100 நபர்களுக்கான ஜாமின் மீதான விசாரனை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.