விஷச் சாராய விவகாரம் | ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த  விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது.  மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 100-க்கும்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த  விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது.  மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதனிடையே,  இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக முறையீடு செய்துள்ளது.  இந்த நிலையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.  கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.