‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன்,…

கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அறிவியல் – புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம் அதன் அட்டகாசமான கிராஃபிக்ஸ் மறு்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.  இருப்பினும் திரைக்கதை சோர்வைத் தருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்த திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.191 கோடியும், இரண்டாம் நாளில் மொத்தம் ரூ.295.5 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த திரைப்படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது கல்கி 2898 ஏடி திரைப்படம் ஆகஸ்ட் 23-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.