களமச்சேரி குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

களமச்சேரி குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.…

களமச்சேரி குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியானது. இது குண்டு வெடிப்பா அல்லது வேறு வகையான விபத்தா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தவிரப்படுத்தினர். 

இருப்பினும் அதில் 7 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மத வழிபாட்டு அரங்கில் குண்டு வெடிப்பு நடந்தது எப்பது என கேரள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குண்டு வெடிப்பு நடந்த இடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விடுமுறையில் உள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர். டிஜிபி சம்பவ இடத்துக்கு விரைந்தார். நாங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.