சென்னை வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து; பயணிகள் அதிர்ச்சி

சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து…

சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து பயணிகள் எச்சரித்த காரணத்தால் ஆந்திர மாநிலம் கூடூர் ரயில் நிலையம் அருகே  உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதாகவும், தீயணைப்பு துறையினர்களுக்கு தகவல் தரப்பட்டதாகவும் தெரிகிறது.

திருப்பதி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் உடனடியாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது என்றும் அதன் பின்னரே ரயில் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரயில் கூடூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டு ரயில் பெட்டியின் உள்ளே எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த தீவிபத்தில் பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.