காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் கூல் அப்டேட்; குஷியில் ரசிகர்கள்!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் 3-வது பாடல் வெளியானது. நானும் ரவுடி தான் படத்தை அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் காத்து வாக்குல…

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் 3-வது பாடல் வெளியானது.

நானும் ரவுடி தான் படத்தை அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இதில், சமந்தாவும் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக இணைந்திருக்கிறார். மேலும், இந்த திரைபடத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ரொமான்டிக்-காமெடி வகையில் இருக்கும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். இந்த திரைபடத்தை ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இதன் முதல் பாடல் “ரெண்டு காதல்”, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியானது. இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் “Two Two Two”, விக்னேஷ் சிவனின் பிறந்த நாளன்று வெளியானது. இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது, “நான் பிழை” என்ற பாடல் வெளியாகியுள்ளது. படத்தின் இந்த பாடலை நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிருத், படத் தயாரிப்பு நிறுவனங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.