நடிகர் அஜித்குமார் – இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மங்காத்தா’.அஜித்துடன் இணைந்து இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், வைபவ், ஆண்ட்ரியா, பிரேம் ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, என பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்தின் பாடலகள் மற்றும் தீம் மியூசிக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
வாலி, வரலாறு படங்களை தொடர்ந்து நடிகர் அஜித் இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். திரை வாழ்க்கையில் சிறிய சறுக்கலை சந்தித்திருந்த் அஜித் குமாருக்கு மங்காத்தா படத்தின் வெற்றி மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது.
இந்த சூழலில் மங்காத்தா திரைப்படம் வரும் 23ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் படத்திற்கனா ரீ-ரிலீஸ் டிரெய்லரும் வெளியானது. மேலும் ரீ-ரிலீஸ் புக்கிங்கிலும் மங்காத்தா திரைப்படம் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு மங்காத்தா படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.









