பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியா..? யுவராஜ் சிங் விளக்கம்!

பாஜகவில் இணைந்து, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பரவிய செய்திகளுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் முற்றுபுள்ளி வைத்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், பா.ஜனதாவில்…

பாஜகவில் இணைந்து, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பரவிய செய்திகளுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் முற்றுபுள்ளி வைத்துள்ளார்.  

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், பா.ஜனதாவில் இணைந்து வரும் மக்களவை தேர்தலில் பஞ்சாப்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன்படி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் யுவராஜ் சிங் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக யுவராஜ் சிங், தனது மவுனத்தை கலைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “ஊடகங்களில் தவறான செய்திகள் வருகிறது. நான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை. எனது ஆர்வம் என்பது வேறு விதமாக உள்ளது.

https://twitter.com/YUVSTRONG12/status/1763608848009420962?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1763608848009420962%7Ctwgr%5E5efdc13eef41f92d426d698ceb69d6c49d29986d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FSports%2FCricket%2Flok-sabha-polls-yuvraj-singh-denies-media-reports-of-him-contesting-from-gurdaspur-1095756

பல்வேறு திறமைகளை கொண்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதிலும், உதவுவதிலும் தான் உள்ளது. எனது YOUWECAN அறக்கட்டளையின் மூலம் அதனை தொடர்ந்து செய்வேன்” என்று அதில் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்கின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.