புரோ கபடி லீக் : புனேரி பல்தான் அணி அபார வெற்றி!

புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசனின் இறுதி போட்டியில் புனேரி பல்தான் அணி அரியானா அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 10-வது புரோ கபடி லீக் போட்டி…

புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசனின் இறுதி போட்டியில் புனேரி பல்தான் அணி அரியானா அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. இந்நிலையில், இந்த புரோ கபடி லீக் போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை மோதியது.

இதையும் படியுங்கள் : கைவிட்டுப் போன ‘கரும்பு விவசாயி’ சின்னம் – நாம் தமிழர் கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த விளக்கம் என்ன?

இதையடுத்து,  புரோ கபடி லீக் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த புனேரி பல்தான் மற்றும் ஜெய்பூர் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறின.  அதன் பின்னர், எலிபினேட்டர் சுற்றின் முடிவில் நடந்த அரை இறுதியில் தொடரில் புனேரி பல்தான் அணி 37 – 21 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்சை அணியை வீழ்த்தியது. இதைபோல, அரியானா அணி 31 -27 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்பூர் அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

இந்த புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டம் ஜதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் அஸ்லாம் முஸ்தபா தலைமையிலான புனேரி பல்தான் அணி மற்றும் ஜெய்தீப் தாஹியா தலைமையிலான அரியானா ஸ்டீலர்ஸ் அணி மோதின.  புனேரி பல்தான் அணி தொடர்ந்து இரண்டாவது முறையும், அரியானா அணி முதல் முறையாகவும் இறுதி ஆட்டத்தில் விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் புனேரி பல்தான் அணி, 28-25 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் முறையாக புனேரி பல்தான் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.