டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் அக்ஸர் பட்டேலுக்கு கொரோனா உறுதி!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் அக்ஸர் பட்டேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் போட்டி வரும் 9ம் தேதி…

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் அக்ஸர் பட்டேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் போட்டி வரும் 9ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இதையடுத்து போட்டிகள் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 6 நகரங்களில் நடக்க உள்ளது. இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேலுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் டெல்லி அணியின் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார். கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமாகும் பட்சத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என அந்த அணி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.