நெல்லை, மதுரையில் ஜோகோ நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்படும்- ஸ்ரீதர் வேம்பு

இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மென்பொருள் நிறுவனம் தொடங்க உள்ளதாக ஜோகோ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஜோகோ…

இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மென்பொருள் நிறுவனம் தொடங்க உள்ளதாக ஜோகோ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஜோகோ மென்பொருள் நிறுவனமானது கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிராமப்புற மறுமலர்ச்சி முயற்சிகள் என்ற ஒரு புதிய முயற்சியின் அடிப்படையில் தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியில் தனது ஜோகோ மென்பொருள் நிறுவன கிளையை தொடங்கியது.

சுமார் ஏழு பேருடன் தொடங்கிய இந்த கிளையில் தற்போது 700க்கும் மேற்பட்ட
ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் நகர்ப்புற இடம் பெயர்வை தடுக்கவும், கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த கிளையானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெற்றுள்ள பயன்கள் குறித்தும், கிராமப்புற மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, இந்நிறுவன மூலம் தொடங்கப்பட்ட பள்ளி மூலமாக பயன் பெற்ற மாணவர்கள் தற்போது அடைந்துள்ள நிலை குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதர் வேம்பு, இளைஞர்கள் கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு செல்லும் இடம்பெயர்வை தடுக்கவும், கிராமப்புற இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும், தென்காசியில் மென்பொருள் நிறுவனம் ஒன்று தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் கிராமப்புற பகுதிகளில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் பள்ளிகள் தொடங்கி உள்ளதாகவும், இந்த முயற்சியானது பல்வேறு கிராமங்களில் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜோகோ நிறுவனத்தின் கிளைகள் நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில்
தொடங்க உள்ளதாகவும், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஜோகோ
நிறுவனத்தின் கலைவாணி பள்ளியை பல்வேறு தொடங்கி கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு திறன் பயிற்சி வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் இளைஞர்களின் நகர்ப்புற இடம்பெயர்வு தடுக்கப்பட்டு கிராமப்புற இளைஞர்கள் திறன்கள் மேம்பட்டு உள்ளூர் வேலை வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாக அவர் தெரிவித்தார். இது போன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஜோகோ நிறுவனம் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.