#JKElections | “அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்” – பிரதமர் #NarendraModi வேண்டுகோள்!

ஜம்மு-காஷ்மீரில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு…

#JKEelections | “Strengthen democracy festival by voting more” - PM #NarendraModi appeals!

ஜம்மு-காஷ்மீரில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று (செப். 18) முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப். 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1-ம் தேதியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின் நடக்கும் முதல் தேர்தலாகும். இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. காங்கிரஸும், தேசிய மாநாடு கட்சியும் கூட்டணியாக போட்டியிடுகின்றன. அனந்த்நாக், சோபியான், தோடா, ராம்பன் உட்பட 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. இத்தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் (எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளம் மற்றும் புதிய வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.