ஜெயலலிதா நினைவு தினம்; ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மரியாதை செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிப்பட்டுள்ளது. பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர், ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர்.

சென்னை சேப்பாக்கத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரோடு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, மைத்ரேயன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், தனது ஆதரவாளர்களுடன், ஜெயலலிதாவை மீண்டும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஆக்குவோம் என்றும், சர்வதிகாரப் போக்கிற்கு முடிவு கட்டுவோம் என்றும், ஜெயலலிதா வழியில் ஓரணியில் இணைந்து பணியாற்றுவோம் என்றும் ஓபிஎஸ் உறுதி மொழி ஏற்றார்.

இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும்,  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவும், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கம்பீரமான நல்லாட்சியை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒவ்வொரு நாளும் உழைத்திடுவோம் என்றும், இந்திய ஆட்சி மொழிகளுள் ஒன்றாக தமிழ் மொழி அறிவிக்கப்படவும் , தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், தமிழக மக்கள் மேன்மையடையவும், தொடர்ந்து பாடுபடுவோம் என்றும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடைமுறைப்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை முடக்க முயற்சிக்கும் திமுகவின் செயலை தடுத்திடுவோம் என்றும் டிடிவி தினகரன், அமமுக தொண்டர்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்றார். வி.கே.சசிகலாவும், தனது ஆதரவாளர்களுடன், உறுதிமொழி ஏற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.