முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

கொரோனா வைரஸ் மனிதால் உருவாக்கப்பட்டது; திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட விஞ்ஞானி

கொரோனா ரைவஸ் மனிதானல் உருவாக்கப்பட்டது என சீனாவின் வூகானில் உள்ள ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி கூறியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்த இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பொது முடக்கத்தை அறிவித்து நோய்பரவலை கட்டுப்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன்காரணமாக தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. இதனிடையே இந்த கொரோனா வைரஸ் வூகான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது என உலக நாடுகள் குற்றச்சாட்டு வைத்தது.  இந்நிலையில், ‘கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்’ என்ற திடுக்கிடும் தகவலை சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் சீனாவில் அமைந்துள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனமான ‘வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில்’ பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர். விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் எழுதிய “வுஹான் பற்றிய உண்மை” என்ற புத்தகத்தின் சில பகுதிகள் வெளிவந்துள்ளன. அதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டார்.

வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்தது. வைரஸ் ஆராய்ச்சி பற்றிய சோதனைகள் போதிய பாதுகாப்பின்றி அங்கு நடத்தப்பட்டன. இத்தகைய வெளிநாட்டு ஆய்வகங்களில் போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை. ஒரு வகையில், இதற்கு அமெரிக்க அரசு தான் காரணம். இத்தகைய ஆபத்தான ‘உயிரி தொழில்நுட்பத்தை’ சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே காரணம். உயிரி ஆயுதம் குறித்த தொழில்நுட்பம் (பயோ வெப்பன்) சீனர்களுக்கு நாம் வழங்கியுள்ளோம்

கொரோனா வைரஸ் ‘மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டது’ என்பது சீனாவுக்கு முதல் நாளிலிருந்தே தெரிந்த விஷயமே என விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் தெரிவித்தார். நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ‘எக்கோஹெல்த் அலையன்ஸின்’ முன்னாள் துணைத் தலைவர் ஆக விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் இருந்தார்.

இது தொற்று நோய்களைப் பற்றி ஆய்வு செய்கிறது. எக்கோஹெல்த் அலையன்ஸ் -வுஹான் ஆய்வகத்துடன் நெருங்கிய உறவுகளை உருவாக்கி உள்ளது. அமெரிக்க அரசின் ‘தேசிய சுகாதார நிறுவன’ நிதியுதவியுடன் இந்த அமைப்பு வௌவால்களில் உள்ள பல கொரோனா வைரஸ்களை ஆய்வு செய்து வருகிறது.

மறுபுறம், சீன அரசு அதிகாரிகளும் வுஹான் ஆய்வக ஊழியர்களும் கொரோனா வைரஸ் அங்கு தோன்றியதை மறுக்கின்றனர். சமீபத்திய விசாரணையின் படி, வுஹான் ஆராய்ச்சி நிறுவனம் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை; தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

Arivazhagan Chinnasamy

இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

Halley Karthik

அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை-இபிஎஸ்

G SaravanaKumar