ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் பகுதியில் 39 இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் பயணம் செய்த பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஹல்காம் என்ற இடத்தில் சாலையில் இருந்து விலகி ஆற்றில் விழுந்து பஸ் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர், அவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவீரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் கூறுகையில், சந்தன்வாரி அருகே பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதில் துணிச்சலான 6 திபெதத்தியன் எல்லை பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், காயமடைந்த பணியாளர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.







