அஜித் புதிதாக நடித்து வரும் ஏகே-61 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் சென்றுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேருந்தில் அஜித் சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தனது 61-வது படத்திற்காக மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘அஜித் 61’ மற்றும் ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான போனி கபூர் ஏகே 61 படத்தை தயாரித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜூன் தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்த பிறகு, படத்தின் முக்கிய படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ‘அஜித் 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், அஜித் தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றதால், அஜித் இல்லாத படக்காட்சிகள் சென்னை மற்றும் சுற்றுபுற பகுதிகளில் படமாக்கப்பட்டது.
இந்நிலையில், படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நடிகர் அஜித் விசாகப்பட்டினம் சென்றார். சென்னை விமான நிலையத்தில் பேருந்தில் நின்றபடி அஜித் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே படத்தில் 70 சதவீத காட்சிகள் படமாக்கி முடித்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.
‘அஜித் 61’ படம் முதலில் 2022 தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு தள்ளி போயுள்ளது. இதையடுத்து படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– இரா.நம்பிராஜன்