பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி..!

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு கலந்து கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், மலையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ…

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு கலந்து கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மலையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 600 காளைகள் பங்கு பெற்றுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து முதல் காளையாக கோவில் காளை திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து, மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடபப்ட்டன. சீறிபாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு கொண்டு அடக்கி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகளும், மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசு, வெள்ளி காசுகள் கட்டில் பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் கால்நடைத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.