முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிக்கட்டை கொடூரமான விளையாட்டாக கருதமுடியாது – உச்சநீதிமன்றம்

ஒரு விளையாட்டில் உயிர் பலி ஏற்படுகிறது என்பதற்காக அதனைரமான விளையாட்டாக  என்று கூற முடியாது என உச்சநீதிமன்றம்  கருத்து தெரிவித்துள்ளது. 

ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஏழாவது நாளாக விசாரணை நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது தமிழக அரசின் வாதத்துக்குப் பதில் வாதம் வைத்த பீட்டா அமைப்பு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான்,  ஜல்லிக்கட்டு மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது.

அதேபோல, காளைகளுக்கும் உடல் நீதியாகவும் கடுமையான தாக்கத்தை விளைவிக்கிறது. காளைகள் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவதில்லை, அவை கட்டாயப்படுத்தப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு கடந்த 5 ஆண்டுகளாகக் கள ஆய்வு செய்து சேகரித்துக் கொடுத்துள்ள தரவுகள், ஆதாரங்கள், அறிக்கைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டு என்பது ஒரு கொடூர விளையாட்டு (blood sport) ஆகும் என கூறினர்.

அப்பது நீதிபதிகள்,  இந்த விளையாட்டில் ஆயுதங்களை எவரும் பயன்படுத்தப்படவில்லை, காளைகளை கொல்லவில்லை அப்படி இருக்கையில் இதை ஒரு கொடூர விளையாட்டு (blood sport) என எப்படிக் கூறுவீர்கள் ? ஸ்பெயினில் நடக்கும் எருது சண்டையில் ஆயிரம் ஏந்தி தாக்குதல் நடத்துவர். ஆனால் இங்கு அவ்வாறு இல்லையே ? இங்கு மனிதர்கள் வெறும் கையுடன் தானே காளையை அடக்க முற்படுகின்றனர். எனவே இது கொடூர விளையாட்டு என எப்படி கூறுகிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்துங்கள் ? என கூறினர்.

அதற்கு, பிட்டா அமைப்பு, கொடூர விளையாட்டு என்பதற்குப் பல விளக்கங்கள் உள்ளன என கூறினர். ஆனால் நீதிபதிகள் நாங்கள் blood sport தொடர்பாக விளக்கம் (definition) கோரவில்லை. மாறாக ஜல்லிக்கட்டில் எங்கு கொடூரம் உள்ளது என்பதைக் கூறுங்கள் ? என தெரிவித்தனர்.

அதற்குப் பதிலளித்த பீட்டா அமைப்பு, எந்தெந்த விளையாட்டுகள் உயிர் பலியை ஏற்படுத்துகிறதோ, அவற்றை blood sport என வகைப்படுத்தப்பட்டுள்ளது என கூறியது. அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், ஒரு விளையாட்டில் உயிர் பலி ஏற்படுகிறது என்பதற்காக அதனை blood sport என கூற முடியாது. ஜல்லிக்கட்டில் காளைய அடக்க முற்படுகிறவர்கள் வெறும் கையுடனே செல்கின்றனர்.

மேலும் அந்த காளையைக் கொல்லவும் இல்லை. அதேவேளையில் உயிர் பலி, இரத்த காயம் என்பது ஒரு எதிர்பாராத சம்பவம் மட்டுமே என தெரிவித்தனர். மேலும் மலையேற்றம் என்பதும் மிக ஆபத்தானது தான். எனவே அதனைத் தடை செய்யலாமா ? என வினவினர். அதற்கு பீட்டா அமைப்பு, மலையேறுவது ஆபத்தான விளையாட்டு அல்லது செயல், இதில் எந்த கொடூரமும் நடத்தப்படவில்லையே ஏனெனில் மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் அவர்களின் விருப்பத்தின் படி தான் செயல்படுகின்றனர்.

ஆனால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் விருப்பத்துடன் தான் அதில் ஈடுபடுகிறதா ? நிச்சயமாக இல்லை. ஏனெனில் அவற்றுக்கு அதன் உரிமையை வெளிப்படுத்தத் தெரியாது என தெரிவித்தார். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கின் மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்கள் என அனைத்து தரப்பும் இரண்டு வாரத்தில் எழுத்துப்பூர்வமா வாதத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதோடு, ஜல்லிக்கட்டு வழக்கின் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“தொலைக்காட்சி விவாதங்களால் பிரச்னை தீவிரமடையும்” – சசி தரூர் எம்.பி

Halley Karthik

சாலை பெயர் மாற்றத்தில் பாஜகவுக்கு சம்பந்தமா? எல்.முருகன் விளக்கம்!

EZHILARASAN D

அனைத்து நாட்களிலும் வழிபாட்டிற்கு கோயில்கள் திறப்பு

Halley Karthik