இமாச்சலப் பிரதேசம், குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்று இன்று அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளன்.  இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாசச்சல சட்டசபைக்கு கடந்த மாதம்…

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்று இன்று அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளன். 

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாசச்சல சட்டசபைக்கு கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதேபோல் குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்தது. இந்நிலையில் பாஜக 182 இடங்களில் 156 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் குஜராத்தில் ஆட்ச்சியமைக்கிறது.

இதேபோல் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. காங்கிரஸ் 40 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.