மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் – ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தல்! 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக  வீரர் ஜெய்ஸ்வால் , ரோகித் சர்மா இருவரும் சதம் அடித்தனர். இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில்  நடைபெற்று…

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக  வீரர் ஜெய்ஸ்வால் , ரோகித் சர்மா இருவரும் சதம் அடித்தனர்.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில்  நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 5  விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து  இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
ஜெய்ஸ்வால் ரோகித் சர்மா நிதானமாக ஆடினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 80 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 40, ரோகித் சர்மா 30 ரன் சேர்த்து களத்தில் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் அறிமுக  வீரர் ஜெய்ஸ்வால் , ரோகித் சர்மா இருவரும் சதம் அடித்தனர்.  103 ரன்கள் எடுத்த போது ரோகித் சர்மா அவுட் ஆனார். ஜெய்ஸ்வால் 143 விராட் கோலி 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்துள்ளது இதன் மூலம் 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.