ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல் : 24 பேர் உயிரிழப்பு – பாகிஸ்தாஸ் பிரதமர் கண்டனம்…!

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் வெட்டா பகுதியில் உள்ள சமன் படக் அருகே சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலில் ஈத் பண்டிகையையொட்டி ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பயணித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 24- பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 50 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் பிரதம்ர் ஷாபாஸ் ஷெரிப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “குவெட்டாவின் சாமன் படக் (Chaman Phatak) அருகே நிகழ்ந்த, அப்பாவி உயிர்களைப் பலிகொண்டதோடு பலரை காயப்படுத்திய அந்தப் பயங்கரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இத்தகைய கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்களால் பாகிஸ்தான் மக்களின் உறுதியை ஒருபோதும் தகர்க்க முடியாது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் வேரறுப்பதில் நாங்கள் உறுதியுடன் நிலைத்திருக்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். துயரம் சூழ்ந்த இந்நேரத்தில், ஒட்டுமொத்த தேசமும் பலுசிஸ்தான் மக்களுடன் தோளோடு தோள் நின்று துணை நிற்கிறது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாஃபர் எக்ஸ்ப்ரஸ் மீது தாக்குதல் நடத்தி 400 பேரை பலூச் விடுதலை அமைப்பு பணயக்கைதிகளாக பிடிதது. இதில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் மற்றவர்கள் அரசாங்கத்தால் காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.