ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு…!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

19 வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய் அணிகள் இதுவரை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டுள்ளது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.