IPL 2026 | கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி!

கொல்கத்தா அணி 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் எடுத்தது….

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா அணி, டெல்லி அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

டெல்லி அணியில் அபிஷேக் போரேல் 22 ரன்களில் வெளியேறினார். ஷகீல் பரக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 39 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் பின் ஆலன் களமிறங்கினர். இதில் பின் ஆலன் 20 ரன்கள் ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் டெல்லி அணி 2 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியது. இருப்பினும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை டெல்லியும், கொல்கத்தாவும் ஏற்கனவே இழந்துவிட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.