பெங்களூருவிலிருந்து ஜெய்ப்பூர் சென்றுக்கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பிறந்த பெண் குழந்தை.
கடந்த புதன்கழமை ஜெய்ப்பூர் சென்றுக்கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விமான ஊழியர்களின் உதவியுடன் அதே விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதுத்தெடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ஒரு மருத்துவர் மற்றும் ஒரு அவசர ஊர்தியை தயாராக வைக்குமாறு ஜெய்ப்பூர் விமான நிலையதிற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குழந்தையும் தாயும் நலமாக இருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பிரசவம் பார்த்த மருத்துவர், சுபாஹனா நசிருக்கு ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டாததாகவும் குறிப்பிடபட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு இண்டிகோ நிறுவனம் பாராட்டுத் தெரிவித்தது.

விமானத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்கும் சலுகை அளிக்கிறது. இதே சலுகை இந்திய விமானங்களில் வழங்கப்படுமா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.