சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் குஷ்பு இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். இதனையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியிலிருந்து மயிலாட்டம், ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை, கரகாட்டம் போன்ற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளோடு ஊர்வலம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன், அதிமுக மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் உள்ளிட்டோருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அங்கயற்கண்ணியிடம், குஷ்பு வேட்புமனுவை அளித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்பதை மாற்றி, தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் நடிகர் ரஜினியின் ஆதரவு என்றைக்கும் தனக்கு உண்டு எனவும் அவர் கூறினார்.