ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

ஒலிம்பிக் வட்டு எறிதல்; இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு தகுதி

ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல் பிரீத் கவுர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். 

ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அதானு தாஸ் தோல்வியடைந்தார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் வீரர் தகஹாருவை அவர் எதிர்கொண்டார். இந்த போட்டியில் 4க்கு 6 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்ததால், அதானு தாஸ் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல் பிரீத் கவுர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் கமல் பிரீத் கவுர் 64 மீட்டர் வீசி 2ம் இடம்பிடித்தார். இதன்மூலம், இந்திய வீராங்கனை கமல் பிரீத் கவுர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல், ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் தோல்வியடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பிய வீரரை எதிர்கொண்ட அமித் பங்கல், 1-4 புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், அவர் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

Advertisement:
SHARE

Related posts

நாடாளுமன்றத்தில் திடீரென ராஜினாமாவை அறிவித்த திரிணாமுல் MP!

Niruban Chakkaaravarthi

“இது ஓய்வுக்கான நேரமில்லை” இணையத்தில் வைரலாகும் விராட் கோலி வீடியோ!

Halley karthi

திட்டமிட்டபடி ஐபிஎல் டி20 தொடர் நடைபெறும் : சவுரவ் கங்குலி

Halley karthi