இந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை கடந்த சில மாதங்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை கடந்த சில மாதங்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது படிப்படியாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,16,13,993 ஆக அதிகரித்துள்ளது.  நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 593 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 291 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 46 கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.