இத்தாலி பிரதமர் காண்டே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கொரோனா பேரிடரால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலி, கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. கொரோனா பேரிடரை கையாண்ட விதம் தொடர்பாக பிரதமர் காண்டே மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், மேத்தியோ ரென்ஸியின் கூட்டணி கட்சி காண்டேவுக்கு அளித்த வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், செனட் சபையில் பெரும்பான்மையை இழந்த காண்டே பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.







