முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி , நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக தமிழ் நாட்டில் சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின் னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள் ளது.

நாளை முதல் 28-ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

டெல்லி பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சைகள்

Halley karthi

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!

Ezhilarasan

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 – தமிழக அரசு அரசாணை வெளியீடு

Halley karthi