திலீபனுக்கு நினைவஞ்சலி: இலங்கை தமிழ் எம்.பி திடீர் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபனுக்கு நினைவஞ்சலி செலுத்த முயன்ற இலங்கை தமிழ் எம்.பி திடீரென கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் திலீபன் (23). இலங்கை…

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபனுக்கு நினைவஞ்சலி செலுத்த முயன்ற இலங்கை தமிழ் எம்.பி திடீரென கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் திலீபன் (23). இலங்கை அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து 1987-ம் ஆண்டு செப்டம் பர் 26-ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற இருந்தது. இதில், தமிழ் தேசிய மக்கள் கூட்டமைப் பின் எம்.பி.யான செல்வராஜா கஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டு திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முயன்றனர்.

அவரையும், அவருடன் சென்ற மேலும் இருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை போலீசார் இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். கொரோனா கால விதிமுறைகளை மீறியதாகவும், தடை செய்யப்பட்ட அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் கைது செய்யப் பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர்.

இந்த கைது சம்பவத்துக்கு இலங்கை தமிழ்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் சி.வி.விக்னேஸ்வரன் கூறும்போது, ஒரு நாடாளு மன்ற உறுப்பினரை போலீஸாா் இழுத்துச் சென்றது சா்வாதிகாரம் என்றும் இறந்தவரை நினைவுகூரக் கூடாது என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை என்றும் இதுபோன்ற நடவடிக்கைகள் தங்கள் அரசியல் உரிமைகளை பெறுவதற்கான போராட்டத்தில் இலங்கைத் தமிழா்களின் உறுதியை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.