தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகச் சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி தெரிவித்துள்ளார்.
75வது சுதந்திர தினமான இன்று சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமியை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகளை என்றும் மறக்காது இந்த அரசு எனக் கூறினார். முதலமைச்சர் நேரில் வந்து சந்தித்தது குறித்து ராமசாமி பேசுகையில், 1942-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றுள்ளேன். ராஜாஜி இறக்கும் வரையிலும் அவருடனே தான் நான் இருந்தேன். சிறைக்குச் சென்று வந்துள்ளேன் எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘கனல் கண்ணனை 26ம் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு!’
தொடர்ந்து பேசிய அவர், இன்றைய தினத்தில் முதலமைச்சர் நேரில் வந்து சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி. முதலமைச்சர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும், இந்த அரசாங்கம் சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகளை என்றும் மறக்காது அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்யும் எனக் கூறியதாகத் தெரிவித்த அவர், கடந்த ஆண்டு 1000 ரூபாய் பென்ஷன் தொகையை உயர்த்தியிருந்தார். இப்போது 2000 உயர்த்தியுள்ளார்.
https://twitter.com/CMOTamilnadu/status/1559099893708312576
மேலும், அவர் எனக்குக் காந்தி சிலை மற்றும் ஒரு புத்தகத்தையும் பரிசளித்தார். நான் அவருக்குச் சால்வை அணிவித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பொன்மொழிகள் புத்தகத்தைப் பரிசளித்தேன் அதைப் பெற்றுக்கொண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார் எனக் கூறினார்.








