கௌதம் கார்த்திக் நடிக்கும் 1947 என்ற படத்தின் டீசரை நடிகர் சிலம்பரசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தனது உதவி இயக்குனர் பொன்குமார் இயக்கும் புதிய படத்தைத் தயாரித்து வருகிறார். நடிகர் கௌதம் கார்த்திக் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. படத்திற்கு 1947 ஆகஸ்ட் 16 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டான 1947 படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் கிடைத்தது. எனவே சுதந்திரம் கிடைத்த அடுத்த நாளில் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதைக்களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்நிலையில், 1947 படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சிலம்பரசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். சுதந்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர், நாடு இன்று 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் வேளையில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்









