#RainUpdatesWithNews7Tamil | Chennai -ல் இன்று கொட்டிய மழை! முழு விவரம் இதோ!

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை…

tnrains, tamilnadu, chennai,

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (அக்-16ம் தேதி ) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், நேற்று நள்ளிரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

இதையும் படியுங்கள் : #TNFactCheck | சென்னையில் 6 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளதாகப் பரவும் தவறான தகவல்!

ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், கோடம்பாக்கம், சூளைமேடு, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, ஆவடி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.

இதனிடையே, நேற்று நள்ளிரவு முதல் பிற்பகல் 12 மணி வரை பெய்த மழை அளவு வருமாறு:

  • பெரம்பூர் – 16.53 செ.மீ
  • அயப்பாக்கம் – 15.9 செ.மீ
  • கொளத்தூர் – 15.81 செ.மீ
  • அண்ணாநகர் (மேற்கு) – 15.24 செ.மீ
  • அம்பத்தூர் – 12.96 செ.மீ
  • கத்திவாக்கம் – 11.82 செ.மீ
  • அமைந்தகரை – 11.47 செ.மீ
  • தண்டையார்பேட்டை – 10.77 செ.மீ
  • வடபழனி – 10.44 செ.மீ
  • மதுரவாயல் – 10.31செ.மீ
  • திருவொற்றியூர் – 9.9 செ.மீ
  • மாதவரம் – 9.72 செ.மீ
  • நுங்கம்பாக்கம் – 9.21 செ.மீ
  • சென்னை சென்ட்ரல் – 8.7 செ.மீ
  • புழல் – 8.64 செ.மீ
  • மணலி – 8.52 செ.மீ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.