பத்ம விருது பெற்ற இரு தோல் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை சோதனை

பத்ம விருது பெற்ற தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் இரு தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் ஆம்பூரில் செயல்பட்டு வரும் இரு தோல் தொழிற்சாலைகளான ஃபரிடா மற்றும் கே.எச்…

பத்ம விருது பெற்ற தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் இரு தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் ஆம்பூரில் செயல்பட்டு வரும் இரு தோல் தொழிற்சாலைகளான ஃபரிடா மற்றும் கே.எச் குரூப் நிறுவனத்திற்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் ஃபரிடா தோல் நிறுவனத்தை மெக்கா இர்சாத் அகமது, மெக்கா ரபீக் அகமது, இஸ்ரார் அகமது ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 13 தோல் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்த இரு நிறுவன அதிபர்களும் உறவினர்கள் என்றும், இவர்கள் தங்களது வருமானத்திற்கு சரி வர கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் தற்போது இச்சோதனை நடைபெற்று வருகிறது.

இச்சோதனையில் சென்னை மற்றும் பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் என 150க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 60க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஒருவர் என தெரிய வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.