நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும், இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு என ஆளுநரின் செயல்பாடு குறித்து திமுக நாடாளுமன்ற உ.றுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்டதைத்தொடர்ந்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் செந்தில் பாலாஜியின் இலாகாக்கள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். இந்நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் ஆர்என்.ரவி அறிவித்தார். ஆனால் பதவி நீக்க உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், “ஒரு நியமன பதவியில் உள்ள ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ஆளுநருக்கு
தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது. அரசியலமைப்புக்கும் ஒரு மாநிலத்தின் இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவதை நிறுத்திவிட்டு, அவர் தனது ஒரே கடமையான ஆளுநர் பணியைச் செய்யலாம்.
தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது. அரசியலமைப்புக்கும் ஒரு மாநிலத்தின் இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவதை நிறுத்திவிட்டு, அவர் தனது ஒரே கடமையான ஆளுநர் பணியைச் செய்யலாம்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு என திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி உரையை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.






