”தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்பது உண்மை” – அமைச்சர் மனே தங்கராஜ்!

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்பது உண்மை என்று தமிழ் நாடு பால்வளத்துறை அமைச்சர் மனே தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 86 கோடி ரூபாய் மதிப்பிலான 121 சாலைத்திட்ட பணிகளுக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.  இதில் திருவட்டார் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ் நாடு பால்வளத்துறை அமைச்சர் மனே தங்கராஜ் கலந்து கொண்டு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.  இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ,சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார் தாரகை மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் குத்துவிளக்கேற்றி திட்டப்பணிகளை துவங்கி வைத்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

”முன்னாள் முதல்வர் ஓ பி பன்னீர்செல்வம் அவர்கள் மத்திய அரசு கல்விக்கு நிதி
வராததை கண்டித்து இருப்பதை பொறுத்தவரையில் அது வரவேற்கத்தக்கது தான்.
எவ்வளவுதான் அலங்கார வார்த்தைகளை பிரதமர் பேசினாலும், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்பது உண்மை. மத்திய அரசுக்கு  8 லட்சம் கோடிஜிஎஸ்டி வரி செலுத்தியுள்ளது. ஆனால் பிரதமர் மூன்று லட்சம் கோடி தான் திருப்பித் தந்துள்ளார்” என தெரிவித்தார்.

மேலும் அவர், “தமிழர்களின் பாரம்பரியத்தையும் தொன்மையும் பற்றி பேசியுள்ள பிரதமர் மோடி, ஏன்  கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து எதுவும் பேசவில்லை? ராஜராஜ சோழனின் சதய விழாவின் பொழுது குஜராத்தில் இருந்த உமாதேவியின் சிலையை அன்று குஜராத் முதல்வராக இருந்து மோடி வழங்காதது ஏன்..? என்ற கேள்விக்கு பிதமர் மோடி பதில் கூற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக குமரி மக்கள் போராடுவதை பொறுத்தவரையில், மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு அமல்படுத்தாது என முதல்வர் அழுத்தம் திருத்தமாக  கூறிவிட்டார்” என  தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.