முக்கியச் செய்திகள் தமிழகம்

குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும் என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நியூஸ் 7 தமிழுக்கு இன்று பிரேத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்ததே அதிமுக தான். ஆணையம் கூறியது உண்மை, குற்றம் செய்யவில்லை என்றால் எதற்காக இவர்கள் பயப்படுகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும். இதில் அரசியல் என்று கூறுவது நியாயம் இல்லை. ஒரு கட்சி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அரசியல் என்று பேசுவது அர்த்தம் இல்லை. நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி வருகிறோம்.

தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கி உள்ளன. எனவே ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அந்த அரசிற்கு உதவியாக இருந்து, அந்த மாநிலங்களின் வளர்ச்சியை மேம்படுத்த வழி உண்டா என்று பார்க்க வேண்டும். தமிழக திராவிட இயக்க அரசியல் அந்த மாநிலங்களை விட வளர்ந்து அற்புதமாக உள்ளது. இந்த வளர்ச்சியை அங்கு சென்று அவர் கூற வேண்டும். தமிழிசை, ஆளுநர் பதவியின் மரியாதை, மாண்பை பொதுமக்கள் மத்தியில் கெடுத்து வருகிறார்.

தமிழக மாணவர்கள் மீது திருப்பதியில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளன. உண்மைத் தன்மையை அறிந்து அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi

முகக்கவசம் அணிவதற்கு எதிராக வழக்கு; நீதிமன்றம் அதிரடி

EZHILARASAN D

பாடலுக்கு ஏற்றவாறு கால்பந்தை விளையாடும் இஸ்லாமிய இளம் பெண்!

Gayathri Venkatesan