முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தொழில்நுட்பம்

சீரானது வாட்ஸ் அப்; பயனர்கள் மகிழ்ச்சி

மெட்டா நிறுவனமானது, வாட்ஸ் அப் சேவை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டம் என விளக்கமளித்ததைத் தொடர்ந்து சில மணி நேரத்திற்குப் பிறகு வாட்ஸ் அப் சேவை மீண்டும் சீரானது.

தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாட்ஸ்-அப் செயலி ஏறக்குறைய 2 மணிநேரம் முடங்கியது. இதனால் பயனாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது மீண்டும் வாட்ஸ் அப் செயல்படத் தொடங்கியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் இந்த செயலி திடீரென முடங்கியதால் வாட்ஸ் அப் செயலி மூலம் தகவல்களை பருமார முடியாமல் மக்கள் அவதிக்குள்ளானர். சரியாக செல்லவேண்டும் என்றால் இன்று (செவ்வாய்) மதியம் சுமார் 12.45 மணியிலிருந்து வாட்ஸ அப் முடங்கியது.

சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த பயனாளர்கள், தங்கள் ட்விட்டர் பக்கங்களுக்குப் படையெடுத்து #WhatsappDown என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வந்தனர்.

இந்த ஹேஷ்டேக் வைராலானதை தொடர்ந்து மெட்டா நிறுவனம், வாட்ஸ் அப் சேவையை விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டம் எனவும், செயலியை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தனது செய்தி தொடர்பாளர் மூலம் விளக்கமளித்தது.  இதைத்தொடர்ந்து சில மணி நேரத்திற்கு பிறகு வாட்ஸ் அப் சேவை மீண்டும் சீரானது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரஷ்யாவில் கடும் விலைவாசி உயர்வு

Arivazhagan Chinnasamy

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மலர்ந்த காதல்: வாடிவாசலில் திருமணம்

Niruban Chakkaaravarthi

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு!

Saravana